தமிழன் ஆளவும் கூடாது, வாழவும் கூடாதா?... கோபத்தில் கொப்பளிக்கும் நெட்சன்கள்! #TNPSC
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை வெளிமாநிலத்தவரும் எழுதலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளதற்கு டுவிட்டரில் கடும் கோபம் கொந்தளிக்கிறது.
Recommended Video

சென்னை: போட்டித் தேர்வுகளை வெளிமாநிலத்தவரும் எழுதலாம் என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை டுவிட்டரில் பலர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
2018 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வெளிமாநிலத்தவரும் பங்கேற்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் 2 ஆண்டுகளில் தமிழ் கற்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி நிபந்தனை விதித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி வெளிமாநிலத்தவரை அரசுப் பணிக்கு அனுமதிக்கும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்திலேயே வேலைவாய்ப்பின்றி அரசுப் பணிக்காக ஏராளமான இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் டிஎன்பிஎஸ்சி ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. டுவிட்டரில் இது குறித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் நெட்டிசன்கள்.
|
தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்
எப்படியும் ஒட்டுபோடமாட்டிங்க என்று மத்திய மாநில அரசு தமிழர்களுக்கு எதிரான ஒரு தாக்குதல் அறிவிப்பாணை தான் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
இந்த அரசு தமிழர்களுக்கானது அல்ல என்று இந்த வலைபதிவர் கோபம் கொப்பளிக்கிறார்.
|
நூலிழை நம்பிக்கைக்கும் முடிவு
தமிழக படித்த வேலையில்லா இளையோருக்கு நூலிழை நம்பிக்கையாயிருந்தது டிஎன்பிஎஸ்சி, அதையும் வடநாட்டானுக்குக் கொடுக்கும் முடிவு. இன்னொரு போராட்டம் இனியெல்லாமே போராட்டம் வீழ்க காவியணிந்த அதிமுக ஆட்சி என்று காட்டமாகக் கூறியுள்ளார் இவர்.
|
நினைவிருக்கட்டும் மெரினா போராட்டம்
மத்திய அரசு எனும் நஞ்சை டிஎன்பிஎஸ்சி வாயிலாக பரவ விடலாமென நினைக்கும் பி. ஜே. பியின் எண்ணம் சற்றும் நிறைவேறாது... அரசியல் என்பது மக்களுக்கு நல்லது செய்ய, கெடுக்க அல்ல... நினைவிருக்கட்டும் மெரினா கடற்கரை என்று எச்சரிக்கும் தொணியில் கருத்து பதிவிட்டள்ளார் இந்த நெட்டிசன்.
|
ஐஎன்பிசின்னு மாத்திடுங்க
எதுக்கு தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் பேசாம இந்தியப் பணியாளர் தேர்வாணையம்னு பேரை மாத்திடுங்க என்று விமர்சிக்கிறார் இந்த வலைபதிவர். பெயரை மாற்றிய கையோடு இடத்தையும் காலி பண்ணுங்க என்கிறார் இவர்.
|
ஆளவும் கூடாது வாழவும் கூடாதா?
தமிழன் என்றால் சிறுபான்மையாளரா? தமிழன் ஆளவும் கூடாது வாழவும் கூடாது என்பது தான் அரசுகளின் நோக்கமா என்று நியாயம் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications