For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெடிக்கல் சீட் வரிசையில் இனி அரசு வேலையும் தமிழர்களுக்கு எட்டாகனி தான்! கொதிக்கும் நெட்டிசன்ஸ்!

டிஎன்பிஎஸ்சி மூலம் வெளிமாநிலத்தவர் வேலை பெறலாம் என்ற தமிழக அரசின் விதிமுறைக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் ஆளா இல்லை?... எதற்காக வெளிமாநிலத்தவரை அனுமதிக்கிறது டிஎன்பிஎஸ்சி?- வீடியோ

    சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் வெளிமாநிலத்தவர் வேலை பெறலாம் என்ற தமிழக அரசின் விதிமுறைக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் இனி வெளி மாநிலத்தவரும் அரசு வேலை பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சியின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு கனவு தவிடுபொடியான நிலையில் தற்போது அரசு வேலையும் எட்டாக்கனியாகிவிடும் என வேதனை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக இளைஞர்களே வேலை வாய்ப்பின்றி தவித்து வரும் நிலையில் தமிழக அரசு வெளி மாநிலத்தவருக்கும் அரசு வேலையில் இடஒதுக்கீடு செய்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

    ஒரு லாரி காம்பட்டீஷன்

    ஊருக்குள் டிஎன்பிஎஸ்சி உதார் விட்டுத் திரிஞ்சவன் எல்லாம் போட்டி தாங்காம மெதுமெதுவா கரை ஒதுங்கும் காலத்துல புதுசா ஒரு லாரி காம்பட்டீஷன் வேற வருதாம். செவலைகள் தாவிக்கொண்டே இருக்கிறார்கள்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    டிஎன்பிஎஸ்சின்னு ஏன்?

    அப்ப டிஎன்பிஎஸ்சின்னு எதற்காக பேர் வச்சிருக்கீங்க.. என கேட்கிறார் இந்த வலைஞர்

    கேன்டிடேட்ஸஅனுமதிக்கிறாங்களா?

    வேற எந்த ஸ்டேட்லயாச்சும் இந்த மாறி மத்த ஸ்டேட் கேன்டிடேட்ஸஅனுமதிக்கிறாங்களா? ஏத்துகவே முடியல.. என்கிறார் இந்த நெட்டிசன்..

    ஏன்னா டிசைன் அப்படி.

    இன்னிக்கு நைட்டு பிஜேபி காரங்க எல்லா விவாதங்களிலும்
    " இதுல என்ன தப்புனு" கேப்பாங்க
    ஏன்னா டிசைன் அப்படி... என்கிறார் இந்த வலைஞர்

    எட்டாக்கனிதான்

    ரைட்டு.. மெடிக்கல் சீட் வரிசையில் இனி அரசு வேலையும் தமிழர்களுக்கு எட்டாகனி தான்.. இந்த அடிமைகளை வெச்சுகிட்டு.. என்கிறார் இந்த வலைஞர்

    English summary
    Netizens shows anger on Tamilnadu govt for revising the TNPSC rule. Tamilnadu govt has revised the TNPSC rule for favour of Other state candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X