கருகும் பயிர்களைக் கண்டு மரணிக்கும் விவசாயிகள்... என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers
வறட்சியால் கருகும் பயிர்களைக் கண்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை 100ஐ தொட்டுள்ளது #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான கருத்துக்களை கூறி தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாகிறது. அதுவே விவசாயியின் தற்கொலை கண்டு கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இன்றைய தினம் காலை முதல் மாலை வரை விவசாயிகளின் பிரச்சினைகள், தற்கொலைகளை, பாதிப்புகளை மக்களுக்கு தெரிவிக்கிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி
|
விவசாயிகளின் வியர்வை
நாம் அன்றாடம் உண்ணும் அரிசி விவசாயிகளின் வியர்வையில் விளைவது என்று பதிவிட்டுள்ளார் ராம்குமார் என்ற வலைத்தளவாசி.
|
வேண்டும் ஒரு புரட்சி
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க ஒரு புரட்சி நடக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர். ஆனால் அது எதுமாதிரியான புரட்சி என்று கூறவில்லை.
|
பணத்தை சாப்பிட முடியாது
இயற்கையை அழிக்கிறோம்... ஆறுகளை பாழாக்குகிறோம். நிலத்தை விஷமாக்குகிறோம். இதனாலேயே மழை குறைந்து விவசாயம் அழிகிறது. பணத்தை சாப்பிட முடியாது என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
வறண்டே கிடக்கிறது
கடந்த ஆண்டு வெள்ளம், இந்த ஆண்டு வறட்சி, தமிழக விவசாயிகளின் வயலும், வயிறும் வறண்டு கிடக்கிறது பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர். விவசாயிகளின் தற்கொலையும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications