வெற்றியை வெறியோடு கொண்டாடியதும், தோல்வியை கண்டு மூலையில் முடங்கியதும் இல்லை: ஸ்டாலின்
சென்னை: வெற்றியை வெறியோடு கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு மூலையில் முடங்கியதும் இல்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தி. நகர் பகுதி திமுக செயலாளர் ஏழுமலையின் மகன் கார்த்திக் என்ற சஞ்சீவ் குமாருக்கும், காயத்ரிக்கும் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று திருமணம் நடைபெற்றது.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்து மணக்களை ஆசிர்வதித்தார். அதன் பிறகு அவர் பேசுகையில்,

ஏழுமலை
ஏழுமலை அனைவரிடமும் அன்பு காட்டுவார். மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளார். நான் சென்னை மாநகர மேயராக இருக்கையில் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க எனக்கு துணையாக இருந்தவர்.

திருமணம்
தற்போது சுயமரியாதை சீர்திருத்த திருமணம் நடந்துள்ளது. இந்த வகை திருமணத்தை கொண்டு வர தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை அடுத்து கருணாநிதி பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதிகள்
சீர்திருத்த திருமணங்கள் தற்போது அதிக அளவில் நடைபெறுகிறது. திருமணங்களை நடத்தி வைக்குமாறு புரோகிதர்களை அழைப்பதை விட என் போன்று அரசியல்வாதிகளை தான் அதிகம் அழைக்கிறார்கள்.

தோல்வி
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது பற்றி பலரும் பேசினார்கள். திமுக மக்களுக்காக பாடுபடும் இயக்கம் ஆகும். வெற்றியை வெறியுடன் கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு மூலையில் முடங்கியதும் இல்லை.

ராமகோபாலன்
தமிழகம் எந்த நிலையில் உள்ளது என்பது ராமகோபாலனின் அறிக்கை மூலம் தெரிகிறது. தமிழகத்தில் சட்டம் இருக்கிறது ஆனால் ஒழுங்காக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பரிகாரம் காணும் நாள் விரைவில் வரும். அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோம் என்றார் ஸ்டாலின்.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications