28 நாள் குழந்தையை தண்ணீர் வாளியில் தூக்கிப் போட்ட 4 வயது சகோதரன்- பரிதாபமாக உயிரிழந்த குழந்தை!
கோவை: கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் 4 வயது சகோதரனால் தண்ணீர் வாளியில் தூக்கிப் போடப்பட்ட ஒரு மாதக் குழந்தை உயிரிழந்தது.
கோவை திருமலைநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், பிறந்து 28 நாள்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில், குழந்தைகளுடன் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த தாயார், தனது பெண் குழந்தையை காணவில்லை என சிங்காநல்லூர் போலீஸில் திங்கள்கிழமை மாலை புகார் அளித்தார்.
இந்த நிலையில், புகார் அளித்த குழந்தையின் தாயார், தொலைபேசியில் போலீஸாரிடம் குழந்தை தனது வீட்டிலுள்ள தண்ணீர் வாளியில் இறந்து கிடப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், குழந்தையின் சடலத்தை மீட்டனர்.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர், 4 வயது சகோதரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், குழந்தையின் சகோதரரான 4 வயது சிறுவன் தண்ணீர் வாளியில் குழந்தையை தூக்கிப் போட்டதை ஒப்புக்கொண்டதாகவும், அதனாலேயே குழந்தை இறந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோவை மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் கேட்டபோது, "குழந்தையை ஒளித்து வைக்கும் நோக்கத்தோடு அவரது சகோதரன் தண்ணீர் வாளியில் தூக்கிப்போட்டதால் குழந்தை இறந்துள்ளது. மேலும், சிறுவன் விளையாட்டாக செய்த குற்றத்துக்கு எவ்வித தண்டணையும் வழங்க முடியாது" என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications