புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க.. அடுத்த விநாடியே கிளம்பி வந்து ஓட்டு போட்டு அசத்தல்!
தாலி கட்டிய கையோடு மணமக்கள் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர்.
Recommended Video
சென்னை: தேர்தல் நாள் மட்டும் இல்லாமல், இன்னைக்கு முகூர்த்த நாளும்கூட. அதனால்தான் கல்யாணம் ஆன நிறைய ஜோடிகள் தாலி கட்டிய அடுத்த நிமிஷமே ஓட்டு போட வந்துவிட்டார்கள்!
காலையிலிருந்து தமிழக மக்கள் ஓட்டு போட்டு கொண்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். இதில் அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று காத்திருந்து ஓட்டு போட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் இன்றைக்கு காலையில் கல்யாணம் ஆன ஜோடிகள் ஓட்டு போட்டு தமிழக மக்களை கவர்ந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி கிராமத்தை சார்ந்த இளைஞர் தாலி கட்டிய கையோடு, மனைவியை கூட்டிக் கொண்டு ஓட்டு போட வந்திருந்தார்.

யுவராணி
இதுபோலவே, மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு திருமணமான புது தம்பதிகள் வாக்களிக்க வந்தனர். சிவா - யுவராணி என்ற தம்பதிக்கு இன்று காலைதான் கல்யாணம் நடந்தது. மணமான உடனேயே தங்கள் பெற்றோருடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

வேண்டுகோள்
அதேபோல சிதம்பரம் தொகுதியில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராணநல்லூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சு என்பவருக்கும் வடக்கு குளக்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடந்தது. தாலி கட்டிய மறுநிமிடமே வாக்குரிமையை இவர்கள் செலுத்தினர். அது மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் தங்களது கடமையை செலுத்திட வேண்டும் கல்யாண பெண் மஞ்சு வேண்டுகோள் விடுத்தார்.

மணமக்கள்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் இப்படி மணமக்கள் ஓட்டு போட வந்திருந்தனர். சுபாஷ்-பிரியா.. இவர்கள் இருவரும்தான் லவ் பண்ணி கல்யாணம் செய்து கொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு அப்பையாநாயக்கர் பட்டி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டு போட்டு விட்டுசென்றனர்.

உற்சாகம்
இப்படி ஆங்காங்கே கல்யாண பொண்ணும், மாப்பிள்ளையும் மாலையும் கழுத்துமாக ஓட்டு போட உற்சாகத்துடன் வந்தவர்களை அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

வாழ்த்துக்கள்
கல்யாணம் முடித்து நேரடியாக பூத்துக்கு வந்துவிட்டதால் சில இடங்களில் அவர்களுக்கு வரிசையில் நின்றிருந்தவர்கள் வழிவிட்டனர். இதனால் மணமக்கள் நேரடியாக சென்று ஓட்டு போட்டனர். இவர்களுக்கு சாவடிகளில் இருந்தவர்களும், ஓட்டு சாவடி அதிகாரிகளும், மனசார வாழ்த்துக்களை சொன்னார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications