வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்.. கன மழை வரும்... வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த மாத முடிவு வரை பருவ மழைக்காலம் உள்ளது. ஆரம்பத்தி்ல் மாநிலம் முழுதும் மழை வெளுத்துக்கட்டியது. இருப்பினும் பின்னர் மழை கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆரம்பித்தது.வடக்கிலும், தெற்கிலும் மாறி மாறிப் பெய்து வந்தது.

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் மழை இல்லை. தென் மாவட்டங்களிலும் மழை பெரிதாக இல்லை.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,
இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் கடலோர மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் வழக்கமான வறண்ட வானிலையே காணப்படும். சென்னையை பொருத்தமட்டில் வானம் பிரகாசமாக காணப்படும். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகையால் 3 நாட்கள் திட்டமிட்டு ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். புதிதாக உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுவது குறித்து அதன் இயக்கத்தை வைத்துதான் சொல்ல முடியும்.
நேற்று வரையிலான நிலவரப்படி இந்த பருவ காலத்தில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 42 செ.மீ. அளவுக்கு தமிழகத்தில் பெய்துள்ளது. இது வழக்கமாக பதிவாகும் மழையை விடவும் 2 சதவீதம் குறைவு. வரும் நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications