ஆள்மாறாட்டம்: பத்திரப்பதிவு அலுவலகங்களில் புகைப்பட திட்டம் அமல்!
சென்னை: ஆள் மாறாட்டத்தை தடுக்கும் வகையில், சார் பதிவாளர் அலுவலகங்களிலேயே புகைப்படம் எடுக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி பத்திரப்பதிவு செய்ய வரும்போது ஆள் மாறாட்டத்தை தடுக்க யார் பெயரில் பதிவு செய்யப்படுகிறதோ, அவர்களை வெப் கேமரா மூலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கப்படும்.
அத்துடன் சார் பதிவாளர் ஊழியர்களுக்கும் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் புரோக்கர்களின் நடமாட்டத்தை கண்டறிவதற்காகவும், சார் பதிவாளர் அலுவலகங்களில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் அனைத்தும் இணையதளம் மூலம் சென்னை சாந்தோமிலுள்ள பத்திரபதிவு தலைமை அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலக பணிகளை கண்காணிக்க முடியும்.












Click it and Unblock the Notifications