ரஜினிக்காக புதிய தொலைக்காட்சி சேனல்... பரபரக்கும் ஏற்பாடுகள்
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்கிவிடுவார் எனக் கூறப்படும் நிலையில் அவருக்காக தொலைக்காட்சி ஒன்றை தொடங்க தீவிர ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் அரசியல் கட்சித் தலைவர் பிளஸ் கல்வித் தந்தையாக இருப்பவர் ஒருவர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் லைசென்ஸ் பெற்று அதை இயக்க நிதியின்றி வைத்துள்ள இரண்டு சேனல் தரப்பில் கூட பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் அந்த பேச்சுவார்த்தை அப்படியே நிலுவையில் உள்ள நிலையில் புதிதாகவே உரிமம் பெறுவதற்கு என்ன வழி, அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன என்பது பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டு வருகிறதாம்.

தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சி சேனல்களில், அதுவும் குறிப்பாக செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களை பொறுத்தவரை நேரடியாகவோ மறைமுகவாகவோ ஏதேனும் ஒரு அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்புடையதாக தான் இருந்து வருகிறது. டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் ஜெயா தொலைக்காட்சி உள்ளதால், அதிமுகவுக்கு என தனிச் செய்தி சேனல் ஒன்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சேனல் தொடங்கி நடத்துவதெல்லாம் சாத்தியமா என அதிமுக சீனியர்களே மலைத்த நிலையில் இன்று அதன் அவசியத்தை புரிந்துகொண்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.ஸை பாராட்டுகின்றனர்.
அந்த வகையில் ரஜினிகாந்துக்கு சேனல் தொடங்க விருப்பமில்லை என்றாலும் கூட, அவரது பின்னணியில் உள்ளவர்கள் தனி சேனல் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறியுள்ளனர். சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் சேனலை தொடங்குவதற்கான பணிகளை கூட அவர்கள் தான் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ரஜினிக்கு இதில் பெரியளவில் உடன்பாடில்லையாம். மேலும், டிவி சேனல் விவகாரத்தில் ரஜினிகாந்த் இன்னும் இறுதியான உறுதியான முடிவும் எதுவும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications