தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் முடிந்தது... சரி, 'கரெண்டு' எப்போ வரும்?
தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல் நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல்மின் நிலையத்தில் உள்ள 2 புதிய யூனிட்டுகளிலும் சோதனையோட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதையடுத்து, விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தூத்துக்குடி தெர்மல் நகரில் தலா 500 மெகா வாட் உற்பத்தி திறனுள்ள 2 யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி அனல் மின் நிலையமும் இணைந்து இந்த அனல் மி்ன் நிலையத்தை அமைந்துள்ளன.
இந்த திட்டத்திற்கு மத்திய நிலக்கரி துறை அமைச்சகமும், மத்திய மின் துறை அமைச்சகமும் அனுமதி அளித்துள்ளன. தொடர்ந்து தூத்துக்குடியில் ரூ.4910 கோடி மதிப்பீட்டில் அனல் மின நிலையம் அமைக்க மத்திய அரசு நிர்வாகம் அனுமதி அளித்தது.
கட்டுமானப் பணிகள்...
திட்ட மதிப்பில் 89 சதவீதத்தை என்எல்சி நிர்வாகமும், 11 சதவீதத்தை தமிழ்நாடு மின்வாரியமும் அளிக்க ஓபபந்தம் கையெழுத்தானது. இதையடுத்து புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கான கட்டுமானப் பணிகள் 2008ல் துவங்கி தற்போது முடிவடையும் நிலையில் உளளன.
புகை போக்கி...
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து என்டிபிஎல் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி நேரடியாக வரும் வகையில் கன்வெயர் பெல்ட் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு யூனிட்டுகளிலும் நவீன பாய்லர்கள் மற்றும் 275 மீட்டர் உயரம் கொண்ட புகை போக்கி அமைக்கப்பட்டுள்ளன.
சோதனை ஓட்டம் வெற்றி...
மேலும் நிர்வாக அலுவலக கட்டிடங்கள், ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளிட்ட வசதிகதள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் யூனிட்டில் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இநத யூனிட்டில் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் 3 கட்டமாக வெற்றிக்கரமாக முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
மின் உற்பத்தி தொடக்கம்...
அடுத்த கட்டமாக ஸ்டீம் டர்பைன் சோதனை ஓட்டம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரியில் இங்கு மின் உற்பத்தி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த மாதம் துவங்கும் என தெரிகிறது.
மின்வெட்டிற்கு தீர்வு...
புதிய அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் மின் உற்பத்தி துவங்கினால் தமிழகத்திற்கு 194 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். 2வது யூனிட்டிலும் மின் உற்பத்தி துவங்கும் போது 387 மெகா வாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கும். இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சனை குறையும். முதல் யூனிட்டில் இறுதிகட்ட சோதனை நடத்த பின்னர் மின் உற்பத்தி துவங்கும் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications