வெள்ளத்தில் வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு புதிய அட்டை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னையில் இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறுகையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் வாக்காளர்கள் பலர் அடையாள அட்டைகளை இழந்து விட்டனர். அவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

புது வாக்காளர் அடையாள அட்டை கேட்டு இதுவரை சென்னையில் 9 ஆயிரத்து 500 பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 224 பேர், திருவள்ளூரில் 300 பேர், கடலூரில் ஆயிரத்து 934 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான புது வாக்காளர் அட்டை ஜனவரி முதல் வாரத்தில் அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும்.
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள், பீகார், மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்து அனுப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஜனவரி 20-ந் தேதிக்குப்பிறகு தமிழகத்துக்கு வரவாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications