ஏற்காடு இடைத்தேர்தல்: வாக்கை சரிபார்க்கும் சீட்டு முறையை அறிமுகம் செய்ய பரிசீலனை
சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்களித்தோருக்கு வாக்கை சரிபார்க்கும் சீட்டு வழங்கும் முறையை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
ஏற்காடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.பெருமாள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் இந்த தொகுதி உறுப்பினர் இடம் காலியாக இருக்கிறது.

6 மாதத்தில் தேர்தல்
காலியாக உள்ள இந்தத் தொகுதி உறுப்பினர் இடத்துக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டும். இதனால், ஏற்காடு தொகுதிக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.

வாக்கு சரிபார்க்கும் சீட்டு
இந்நிலையில் ஏற்காடு இடைத்தேர்தலில் வாக்களிப்பவர்களுக்கு வாக்கை சரிபார்க்கும் சீட்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

நாகலாந்தில் சோதனை முறை
நாகாலாந்தில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற நோக்சென் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் முதன் முறையாக இந்த சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது ஏற்காடு இடைத் தேர்தலிலும் அந்த இயந்திரங்களை பயன்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு சரிபார்க்கும் சீட்டுடன் இயந்திரங்கள்
இதைத் தொடர்ந்து இந்த இயந்திரங்களை வரும் லோக்சபா தேர்தலில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications