புத்தாண்டு தினக் கொண்டாட்டம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் 57 ஆம்புலன்ஸ் வாகனங்கள்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்கள், விபத்துகள் ஏற்பட்டால் கையாள்வதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்ட உள்ளன.
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களில், தமிழகத்தில் சென்னை முதலிடத்திலும், கோவை, திருச்சி ஆகிய இடங்கள் அதற்கடுத்தும் உள்ளன. டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 1 வரை அசம்பாவிதங்கள், விபத்துகள் நேர்ந்தால் அவற்றைக் கையாள்வதற்கு சென்னையின் முக்கிய இடங்களில் அவசர ஊர்திகள் நிறுத்தப்பட உள்ளன.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் அதிகாரிகள் கூறியது: ஆங்கில புத்தாண்டு தினத்தன்று சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் கூடுவர். அதற்காக செயல்பாட்டில் உள்ள 41 வாகனங்களும்,16 புதிய வாகனங்களும் கடற்கரை சாலை, வாலாஜா சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள், சந்திப்புகளில் நிறுத்தப்பட்டிருக்கும். 108 சேவையின் கட்டுப்பாட்டு அறையில் அனைத்து ஊழியர்களும் பணியில் இருப்பர்.
வாக்கி-டாக்கியிலும் தகவல்: டிசம்பர் 31-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணி வரை ஒரே சமயத்தில் செல்லிடப்பேசிகளில் வாழ்த்துகள் பகிரப்படுவதால், அந்த சமயத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் ஸ்தம்பிக்கும். அந்த நேரத்தில் விபத்துகள், அசம்பாவிதங்கள் நடைபெற்றால், செல்பேசியில் தகவல் அளிக்க இயலாது. ஆகவே, காவல் துறையினரின் வாக்கி-டாக்கியின் மூலம் 108 சேவை மையத்துக்கு தகவல் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்பை எளிதாக்கும் வகையில், '108' சேவை கட்டுப்பாட்டு அறையில், போலீஸ் அதிகாரிகளும் இருப்பர் என்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications