நெய்வேலியில் மணக்கோலத்தில் வந்து ஓட்டுப் போட்ட மணமக்கள்- வாழ்த்திய அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி: சட்டசபை தேர்தலில் 100% வாக்குப் பதிவுக்காக தேர்தல் ஆணையம் செய்த பிரசாரம் பலன் தராமல் இல்லை... நெய்வேலி தொகுதியில் மணக்கோலத்தில் தம்பதி சமேதராய் வந்து வாக்களித்துள்ளனர்.

தேர்தலில் 100% வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் தொடர்ச்சியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்காக விழிப்புணர்வு பேரணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரசார யுக்திகளையும் தேர்தல் ஆணையம் கையாண்டது.

இருந்தபோதும் இன்றைய மழை இந்த 100% வாக்குப் பதிவு கனவுக்கு வேட்டு வைக்கும் வகையில் தொடர்கிறது. இதனிடையே ஆறுதல் செய்தியாக நெய்வேலி தொகுதிக்குட்பட்ட பத்திரக் கோட்டையில் இன்று காலையில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அப்படியே மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.

இது தேர்தல் அதிகாரிகளை மகிழ்ச்சி அடையச் செய்தது. தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மணமக்களுக்கும் அவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+