தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், ''தமிழகத்தை பொருத்தவரை வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 101.12 டிகிரி பாரன்ஹீட், சென்னையில் 96.98 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை கன மழை பெய்தது. இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications