48 மணி நேரத்தில் கடும் வெயில்: பகல் 12 - 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்; வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர பகுதிகளில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியல் (98.6 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை (105.8 டிகிரி பாரன்ஹீர் வரை) உயரக் கூடும். எனவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், பகல் நேரங்களில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். சென்னை, அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் பகல் நேரங்களில் அனல்காற்றும், வெப்பமும் அதிகரித்துக் காணப்படும். தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 108 டிகிரி
அதிக வெப்பத்தின் காரணமாக இன்று தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இன்று பதிவான வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்): வேலூர் - 108, திருத்தணி, திருப்பத்தூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம், தருமபுரி - 106, மதுரை, பாளையங்கோட்டை - 104, நாகப்பட்டினம், சென்னை - 102, தொண்டி, கோவை - 100.
ஆட்சியர் எச்சரிக்கை:
வானிலை மைய எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் வகையில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும், இந்த நேரத்தில் அதிக அளவில் களைப்பை ஏற்படுத்தும் பணிகளை செய்ய வேண்டாம் என்றும், நிறைய தண்ணீர் பருக வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இரா.கஜலெட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், காற்றோட்டமான பருத்தி அடைகளை அணிய வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை பார்க்கிங் செய்துள்ள வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்ல நேரும்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.
தலை, கழுத்து மற்றும் கை கால்களை சிறிது ஈரமான துணியினால் மூடிச் செல்ல வேண்டும். தொப்பி அல்லது குடை எடுத்துச் செல்ல வேண்டும். களைப்பாக உணரும் பட்சத்தில் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.
தேநீர், காபி போன்றவற்றை தவிர்த்து மோர், கஞ்சி மற்றும் பழச்சாறு போன்ற பானங்களை அருந்த வேண்டும். வெயிலினால் சோர்வு மற்றும் உடல் நலக்குறை ஏற்படும் படச்தில் மருத்துவர்களை அனுகவும். கால்நடைகளை நிழலான இடத்தில் தங்க வைப்பதோடு அவைகளுக்கு தண்ணீரும் வழங்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications