அடுத்த டார்க்கெட் “தூ” டீ-சர்ட்டுகள்- இதெல்லாம் பெருமையா?
சென்னை: பீப் என்ற இரண்டு எழுத்தால் வந்த வினையில் சிக்கி சிம்பு நசுங்கி சீரழிந்த நிலையில் "தூ" என்ற ஒரே வார்த்தையில் அந்த பிரச்சினையையே இருட்டடிப்பு செய்துவிட்டார் "கேப்டன்".
வழக்மாக நாம் துப்பும் எச்சிலிலிருந்து வைரஸ்தான் பரவும்.. ஆனால் விஜயகாந்த் துப்பிய "தூ" இப்போது வைரல் ஆகி விட்டது. சமூக வலைத் தளங்களில் எங்கு பார்த்தாலும் யாராவது ஒருவர் துப்பியபடியே உள்ளார்.
இதற்கெல்லாம் உச்சம் வைக்கும் வகையில் ஒரே நாளில் "தூ" என்ற வார்த்தை பொறித்த டீ-சர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளதுதான் கொடுமையிலும் கொடுமை.

மனோபாவமே இதுதான்:
இது "எக்ஸ்பிரஸ்" உலகம். எல்லாருக்கும் தினமும் வாயில் போட்டு மென்று அரைத்துத் துப்ப ஏதேனும் அவல் வேண்டும். அப்படி தினமும் சிக்கி, சிக்கி எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்பவர்களில் முக்கியமானவர் "விஜயகாந்த்".

துப்பிய கேப்டன்:
அப்படி அவர் ஓவர் எக்ஸைட்மெண்ட் ஆகி மென்று துப்பிய வார்த்தைதான் "தூ". பாவம் திருவள்ளுவரின் "துப்பார்க்குத் துப்பாய" குறளை நேற்று முன் தினம்தான் (தப்புத் தப்பாக) படித்திருப்பார் போல. அவரை சந்தி சிரிக்க வைத்துவிட்டது அந்த ஓரெழுத்து வார்த்தை.

போதுமடா போதும்:
ஒன்று போனால் மற்றொன்று என்ற மனோபாவத்தில் சிக்கி சுய ஒழுக்கம் பேணுகிறோமே இல்லையோ, நக்கீரரை எரிக்க கண்களைத் திறந்ததுபோல் இன்றைய காலகட்டத்தில் தினம், தினம் நெற்றிக் கண்ணை திறந்து குற்றம் கண்டுபிடிக்கும் நமக்கும் இது வாய்க்கு அவலானது கொடுமையிலும் கொடுமை.

இப்டி பண்றீங்களேமா:
இதில் இப்படிப்பட்ட ஆசாமிகள் வேறு ஏதாவது ஒரு பிரச்சனையை தினமும் வாலண்ட்டியராக இழுத்து வண்டி, வண்டியாய் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் தெரிந்து செய்கிறார்களா, இல்லை தெரிவதற்காக செய்கிறார்களா என்பதுதான் தெரிவதே இல்லை.

திருந்த மாட்டாங்க...திருந்தவே மாட்டாங்க:
இந்தநிலையில்தான் விஜயகாந்த் நேற்று வழக்கம்போல பேசிய "தூ" என்கிற துப்பலையும் டீ-சர்ட்டில் போட்டு விற்கின்றேன் என்ற பெயரில் பெருமையாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

தூக்கி அடிச்சேன்னா பாரு:
இப்படித்தான் முன்பு அவர் டெல்லியில் வைத்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறி கடைசியில் தூக்கி அடிச்சேன்னா பார்த்துக்க என்று கூறியதை வைத்து டீ சர்ட் போட்டு காசு பார்த்தனர்.
ஹ்ம்ம்.. எதுவும் சொல்வதற்கில்லை...!
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications