சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஹோட்டல் அமைக்க லஞ்சம்.. வசமாக சிபிஐயிடம் சிக்கிய மத்திய அரசு அதிகாரி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: நெடுஞ்சாலை அருகே ஹோட்டல் திறக்க லஞ்சம் பெற்ற மத்திய அரசு அதிகாரி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராயர் என்பவர் ஹோட்டல் அமைக்க திட்டமிட்டார். இதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1.60 லட்சம் தொகையை முறையாக அளித்துவிட்டார்.

NHAI officer Beema Sinha has been arrested by the CBI

ஆனால் தேசிய நெடுஞ்சாலையின், விழுப்புரம் மண்டல திட்ட இயக்குநர் பீம சின்ஹா, ஹோட்டலுக்கு அனுமதி வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.4 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து சென்னையிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் ராயர் புகார் அளித்தார். சிபிஐ அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையின்பேரில் ரூ.2 லட்சத்துடன், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை அலுவலகம் சென்ற ராயர், அங்கு பீம சின்ஹாவை சந்தித்து அந்த பணத்தை முதல் தவணையாக வைத்துக்கொள்ளும்படி கொடுத்தார்.

பீமசின்ஹா இதை வாங்கியபோது, மறைந்திருந்த சிபிஐ எஸ்பி ரவி தலைமையிலான அதிகாரிகள், பீமசின்ஹாவை கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த உதவியாளர் சரவணனையும் கைது செய்தனர்.

இதையடுத்து பீமசின்ஹா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+