ஹைகோர்ட்டில் நீலகிரி பாஜக வேட்பாளர் வழக்கு! அவசரமாக விசாரிக்க மறுப்பு!!
சென்னை: நீலகிரி லோக்சபா தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீலகிரி தொகுதியில் குருமூர்த்தி என்பவரை பாஜக வேட்பாளராக அறிவித்தது. அவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்புமனுவும் மாற்று வேட்பாளர் மனுவும் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன.

இவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என்பதால் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதாக கூறப்பட்டது. ஆனால் அதிமுகவுக்கு சாதகமாக செயல்படும் வகையிலேயே குருமூர்த்தி விலைபோய்விட்டார் என்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கொந்தளித்து பாஜக அலுவலகத்தை சூறையாடினர். .
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் குருமூர்த்தி இன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமது வேட்புமனு தள்ளுபடி செய்தது தவறானது.. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை அவசர வழக்காக கருத முடியாது.. தேர்தல் வழக்காக மட்டுமே கருத முடியும் என்று கூறியது.
இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஊட்டி குடியிருப்புக்குள் புகுந்த கழுகு.. முதுகில் மர்ம கருவியைப் பார்த்து ஆடிப்போன மக்கள்












Click it and Unblock the Notifications