சென்னை சீர்திருத்த பள்ளியிலிருந்து 9 சிறுமிகள் தப்பி ஓட்டம்
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 சிறுமிகள் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தப்பியோடினர்.
சென்னை: சென்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தங்க வைக்கப்பட்ட 9 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை தப்பிச் சென்றனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, கெல்லீஸ் பகுதியில் அரசு கூர்நோக்கு பள்ளி செயல்பட்டு வருகிறது. சிறு வயதில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிறுவர், சிறுமிகள் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த பள்ளியில், திருவொற்றியூர், வண்ணாரபேட்டை, மணலி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 9 சிறுமிகளை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அங்கிருந்து 9 சிறுமிகளும் யாருக்கும் தெரியாமல் கதவை திறந்து, காப்பக கேட் வழியாக ஏறி குதித்து தப்பிச் சென்றனர்.சத்தம் கேட்டு சீர்திருத்த பள்ளி காப்பாளர் எழுந்து பார்த்தபோது, சிறுமிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக, இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தப்பியோடிய 9 சிறுமிகளும் அதே பகுதியில் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த சீர்திருத்த பள்ளி ஊழியர்கள், அவர்களை பிடித்து காப்பகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். கடந்த ஜூன் மாதம் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதனை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரவோடு இரவாக 34 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து வெளியே தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications