திண்டுக்கல் அருகே நள்ளிரவில் விபத்து – கொடைக்கானல் சென்று திரும்பிய 9 பேர் பரிதாப பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில் அதிகாலை 1.30 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பலியானார்கள்.
நேற்று இரவு டிஎன்.34 ஆர்.0652 எண்ணுடைய பால் டேங்கர் லாரி முசிறியிலிருந்து 15 ஆயிரத்து 500 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு கேரளாவில் உள்ள தனியார் பால் பண்ணைக¢கு செம்பட்டி வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டியிருந்தது.

அப்போது கொடைக்கானலிலிருந்து ஒரு குவாலிஸ் காரில் பத்து பேர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளபட்டிக்கு சென்றனர்.
இவர்களது கார் செம்பட்டி அருகே வத்தலக்குண்டு மெயின் ரோடு சேடபட்டி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த பால் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

பால் டேங்கர் லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குவாலிஸ் காரில் சென்ற கார் டிரைவர் மோகன் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
இந்த விபத்தில் கார் முன்பகுதியில் டிரைவர் மோகன் உடல் நசுங்கி பலியானார். அவரது உடலை சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் ஒரு கை இல்லாமல் மீட்டனர். மேலும் பலருக்கு கால், கை துண்டாது. தலையில் பலத்த காயமடைந்து உடல் சிதறி பலியானார்கள்.

தகவல் அறிந்த செம்பட்டி போலீஸ் சிறப்பு எஸ்.ஐ செல்வராஜ் மற்றும் போலீசார் தீயணைப்புத்துறையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிப்பட்டியில் உள்ள அரபி கல்லூரியில் படிக்கும் இவர்கள் கொடைக்கானலில் உள்ள ஒரு புது ஹோட்டலில் பாத்தியா தொழுகைக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
பள்ளிப்பட்டி அருகே உள்ள அரவாக்குறிச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன். இவருக்கு சொந்தமான வாடகைக் காரில் 9 பேரும் சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் டிரைவர் மோகன், தமிம் அன்சாரி அலி, அபிசாலி , சையது இப்ராகிம் , அப்துல் ரகுமான் , ஹலிவுல்லா , பசீர்வுல்லா, அப்துல் ரகீம் அலிபா ஆகியோர் உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த கலில் ரகுமான் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்தால் 1.30 மணி முதல் 3.30 மணி வரை இரண்டு மணி நேரம் செம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் சம்பவம் நடந்தவுடன் அந்த இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த பள்ளப்பட்டியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications