மல்லிப்பூ, காட்டன் புடவை.. பளிச் முகம்.. எப்படி இருந்த நிர்மலாதேவி இப்படி ஆயிட்டாரே!
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜரானார் பேராசிரியர் நிர்மலாதேவி
Recommended Video
ரீவில்லிபுத்தூர்: அழுது வடியும் முகம், பீதியில் கலங்கும் கண்கள், கொஞ்சம்கூட ஜீவனே இல்லாத செயல்பாடுகள், வெட்கம், பயம், நாணம், அச்சம், குழப்பம் என ஒருசேர கொட்டி கிடந்த நிர்மலாதேவி இன்று வேற லெவலில் காட்சி தருகிறார்!
கடந்த ஒரு வருடமாக ஜெயிலுக்கும் கோர்ட்டுக்கும் அலையாய் அலைந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. ஒவ்வொரு முறை வரும்போதும் அவருடன், போலீசார் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் திரண்டு வருவார்கள்.
ஒரு செய்தியாளரும் அவரிடம் பேசிவிடக்கூடாது என்று பொத்தினாற் போலவே கூட்டிட்டு வந்து பொத்தினாற் போலவே அழைத்து சென்றுவிடுவார்கள்.

3 கட்டை பைகள்
ஜாமீன் கிடைக்காதா என்று ஏங்கி கிடந்த நேரத்தில், கோர்ட் நேரடியாக தலையிட்டு 4 கேள்வி நறுக்கென்று இந்த விஷயத்தில் கேட்ட பிறகுதான் நிர்மலாதேவிக்கு ஜாமீன் கிடைக்க வழி பிறந்தது. 3 கட்டை பைகளுடன் ஜெயிலை விட்டு வெளியே வந்தார்! ஆனால் எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரக்கூடாது என்பது நிபந்தனை.

ஒத்திவைப்பு
இது சம்பந்தமாக வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. அதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கும் வந்து போகிறார். இப்போது கூட ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜரானார். அவருடன் பேராசிரியர் முருகனும் ஆஜரானார். வழக்கின் விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மல்லிப்பூ
இந்த வழக்கில் நிர்மலாதேவி குற்றவாளியா, நிரபராதியா என்பதை நீதிமன்றம் பார்த்து கொள்ளும் என்றாலும், நிர்மலாதேவி தோற்றத்தில் நிறைய மாற்றம் தெரிகிறது. எப்போதெல்லாம் கோர்ட்டுக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் பளிச்செனவே காணப்படுகிறார். நேர்த்தியாக உடுத்திய காட்டன் புடவை, மல்லிகைப்பூ, குங்குமம், கையில் ஹேண்ட் பேக் சகிதம் வந்து போகிறார். பழைய சோகம், பீதி, பயம் முகத்தில் காணாமல் போய் பளிச்சென இருக்கிறார் நிர்மலாதேவி.. குறிப்பாக புன்னகை தவழ்கிறது முகத்தில்!

தண்டனை வேண்டும்
என்ன வருத்தம் என்றால் கடைசி வரை இந்த வழக்கில் உண்மையான உண்மை வெளியே வராமல் போய் விடுமே என்பதுதான். பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்டு வரும் எத்தனையோ அப்பாவி மாணவிகளுக்கு இந்த வழக்கின் தீர்ப்பு மிகப் பெரிய நிவாரணம் தரும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு விசாரணை வளையத்தை நிர்மலா தேவி, முருகனைத் தாண்டி விஸ்தரிக்க வேண்டும். யாரெல்லாம் தப்பு செய்தார்களோ அவர்கள் எல்லாமல் ஒருவர் விடாமல் தண்டனைக்குள்ளாக வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பமாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications