மொட்டை அடித்து கொண்டு கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவி.. பரபரப்பை தந்த அடுத்த கெட்-அப்!
பேராசிரியை நிர்மலாதேவி இன்று கோர்ட்டில் ஆஜரானார்
Recommended Video
ஸ்ரீவில்லிப்புத்தூர்: கோர்ட்டுக்கு இன்றைக்கு எப்படி வரப்போகிறாரோ என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மொட்டை அடித்துகொண்டு கோர்ட்டில் ஆஜரானார் பேராசிரியை நிர்மலாதேவி.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்தாலும், வழக்கு விசாரணைக்காக அவ்வப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

தலைமுடி
2 வாரத்துக்கு முன்புகூட இப்படித்தான் கோர்ட்டில் ஆஜராக வந்தார் நிர்மலாதேவி. ஆனால் கோர்ட் வளாகத்தில் உட்கார்ந்து கொண்டவர், தலைமுடியை வெட்டி காதில் தொங்கவிட்டு கொண்டு, "காமாட்சி அம்மன் பேசுகிறேன்" என்று குறி சொல்லி தனியாக புலம்ப ஆரம்பித்ததுடன், கோர்ட்டை விட்டு வெளியேற மறுத்தார்.. தியானமும் செய்தார்.

வெளியேற்றம்
பிறகு வக்கீல்கள் சமாதானம் செய்து அவரை கோர்ட்டை விட்டு வெளியேற்றினால், அவர் நேராக அருப்புக்கோட்டை தர்காவிற்குள் தலைவிரி கோலமாக நுழைந்து, "பேய் பிடிச்சிருக்கு.. மந்திரிச்சு விடும்படி" அலப்பறை செய்தார். இதையடுத்து பெண் போலீசார் விரைந்து சென்று அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.

சிகிச்சை
அடுத்த சில தினங்களில், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநல ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து மன உளைச்சலுக்கான சிகிச்சையும் பெற்று வருகிறார் என்றும் தகவல்கள் வந்தன. இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனநல சிகிச்சை பெற்ற நிலையில், நிர்மலா இன்று கோர்ட்டில் எப்படி ஆஜராவார், அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே ஏற்பட்டது.

கருப்பசாமி
எதிர்பார்த்தபடியே கோர்ட்டில் சரியான நேரத்தில் ஆஜரானார் நிர்மலாதேவி. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மொட்டை அடித்து வந்திருந்தார். இதில் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் இன்று ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பாரி, வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். இதையடுத்து, கோர்ட்டை விட்டு வெளியேறிய நிர்மலாதேவி காரில் புறப்பட்டு சென்றார்.

மொட்டை
எதற்காக நிர்மலாதேவி மொட்டை அடித்து கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. ஆனால், ஜெயிலில் இருந்து வெளியே வந்தால் மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டி இருந்ததாகவும், அதன்படியே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் போய் மொட்டை அடித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நிர்மலாவின் ரசிகர்
இதனிடையே, நிர்மலாதேவிக்கு அன்பழகன் என்ற ஒரு ரசிகர் உள்ளார். இவர் தேனியை சேர்ந்தவர். நிர்மலாதேவி கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் இந்த அன்பழகனும் வருவார். அதன்படியே இன்றும் அன்பழகன் கோர்ட்டுக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications