ஊட்டியில் குவியும் சுற்றுலாப் பயணிகளால் ஏ.டி.எம்.களில் 'நோ மணி'
நீலகிரி: வெயிலின் உக்ரத்தால் ஊட்டியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் ஏ.டி.எம். மையங்களில் போதிய பணம் இல்லாததால் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் துவங்கிய கையோடு வெயில் சுட்டெரித்து வருகிறது. மாநிலத்தில் தினமும் குறைந்தது 9 இடங்களிலாவது வெயில் 100 டிகிரியைத் தொட்டுவிடுகிறது.
இப்படி சூரியன் அனலை கக்குவதால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் என்று மலைப் பகுதிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியில் திரும்பும் பக்கம் எல்லாம் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமாக உள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான ஊட்டியில் வெறும் 13 ஏ.டி.எம். மையங்கள் தான் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்தனர். மேலும் போதிய பணம் நிரப்பப்படாததால் பல ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லாமல் போனது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.












Click it and Unblock the Notifications