பொறுப்பு முதல்வர் விவகாரம்... ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு இல்லை... திருநாவுக்கரசர்
சென்னை: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுடன் எந்த ஒரு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவை சந்தித்து பேசிவிட்டு வெளியே வந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கவர்னரை நான் மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். நாங்கள் இருவரும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது எம்பியாக ஒன்றாக பணியாற்றியவர்கள். அந்த நட்பின் அடிப்படையில் இன்று சந்தித்து பேசினேன். மேலும், காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு உரிய வகையில் காவிரியில் இருந்து நீரைப் பெற்றுத் தருவது குறித்து எடுத்துரைத்தேன்.
தமிழக அரசு நிர்வாகத்தைப் பற்றி எதுவும் ஆளுநரிடம் பேசவில்லை. அதேபோன்று தமிழக முதல்வரின் உடல் நிலை குறித்து எதுவும் பேசவில்லை. அவரது உடல் நிலை குறித்து பேச நாங்கள் இருவரும் மருத்துவர்கள் இல்லை. அதனால் அதைப்பற்றி பேசவில்லை.
பொறுப்பு முதல்வர் குறித்து ஸ்டாலின் கேட்பது அவருடைய கருத்து. தேவையில்லை என்பது என் கருத்து. அதனால் ஸ்டாலினுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி மட்டுமே. தவிர, ஒவ்வொருவர் சொல்லும் கருத்துக்கும் கூட்டணி அமைக்க முடியாது. தமிழக முதல்வர் உடல் நிலை இப்படி இருக்கும் போது அமைச்சர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். மற்றபடி பொறுப்பு முதல்வர் குறித்து ஆலோசனை சொல்ல நான் விரும்பவில்லை. அதேபோன்று முதல்வரின் உடல்நிலை குறித்து சிபிஐ விசாரணை தேவை என்று கூறுவதும் சரியான கருத்தல்ல. அதனை நான் ஏற்கவில்லை.
நான் காங்கிரஸ் கட்சித் தலைவரானதில் இருந்து அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசிக் கொண்டிருக்கிறேன். இது எல்லாம் மரியாதை நிமித்தமாகவே நடக்கிறது. இந்தச் சந்திப்புகளின் போது கூட்டணி தொடர்பான பேச்சுக்களை நான் பேசவில்லை என்று திருநாவுக்கரசர் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications