முதல்வரின் கண் அசைவுக்கேற்ப சபாநாயகர் செயல்படுவது ஜனநாயகப் படுகொலை: இளங்கோவன் காட்டம்
சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வரின் கண் அசைவுக்கேற்ப சபாநாயகர் செயல்படுவது ஜனநாயகப் படுகொலையாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை உட்பட 8 மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 3-வது நாளாக மதுரையில் இன்று, 8 மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு வருகிறோம்.
நிர்வாகிகள் கூறும் கருத்துக்கள் வருகிற 28-ந் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில், அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் தமிழக காங்கிரசில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
தேர்தல் தொடர்பான பணிகளுக்கு பொறுப்பாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு அனுமதி இல்லை. முதல்வரின் கண் அசைவுக்கு ஏற்ப, சபாநாயகர் செயல்படுவது ஜனநாயக படுகொலைக்கு சமமாகும்.
1967-க்கு பின்பு திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், சட்டசபையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றன. எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications