மதிமுக- பாஜக இடையே கூட்டணியில் பிரச்சனை இல்லை: இல. கணேசன் விளக்கம்

சென்னையில் நாளை நடைபெறும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடியின் பொதுக்கூட்டத்தில் முதலில் மதிமுக பொதுச் செயலர் வைகோ கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் வைகோ கலந்து கொள்ளமாட்டார்.. அவரது கட்சித் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே திமுகவுடன் பாஜக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாலேயே வைகோ, மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சென்னையில் இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
மதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நாளைய மாநாட்டில் மதிமுகவின் பிரதிநிதி பங்கேற்பது வரவேற்கத்தக்கது.
அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டத்தில் வைகோவும் கலந்து கொள்வார். இதர கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்காததால் நாளைய கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.
வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கவே நாளைய கூட்டத்தில் வைகோ கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு இல. கணேசன் தெரிவித்தார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications