கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் அதீத கன மழை கிடையாது.. வானிலை மையம்
Recommended Video
சென்னை: கோவை, நீலகிரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது என்றும் இங்கு மிக கனமழைக்குத்தான் வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாலும், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாளைக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மலைப்பகுதியில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் சார்பில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் கேரளாவிலும் அதீத கனமழைபெய்யும் ரெட் அலார்ட் விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதீத கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றார்.
இதேபோல் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்மிக கனமழை பெய்க்ககூடும் என்றும் பாலசந்திரன் கூறினார்.
மேலும் சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய அதிகாரி தனது அறிவிப்பில் கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications