சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, 18 தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீடிப்பு - ஹைகோர்ட்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்ற தடை நீடிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதித்த இடைக்கால தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும் விதித்த தடை நீடிக்கிறது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று அக்டோபர் 4ஆம் தேதி வரையில் வரையில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

தினகரன் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதித்த இடைக்கால தடை நீடிக்கும் என்று உத்தரவிட்டார். 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும் தடை நீடிக்கிறது எனவும் நீதிபதி பிறப்பித்த ஆணையில் தெரிவித்தார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications