சிபிஎஸ்இ குட்டீஸ்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்... இனி நோ ஹோம் ஒர்க்...
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு 2-ஆம் வகுப்பு வரையில் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது.
Recommended Video

சென்னை: என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை பின்பற்றும் 18000 சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 2-ஆம் வகுப்பு வரையில் வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது.
பெரும்பாலான நகரங்களில் சிபிஎஸ்இ பள்ளிகளும், அரசு, மெட்ரிக் பள்ளிகளும் உள்ளன. இவற்றுள் சிபிஎஸ்இ பள்ளிகள் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. மேலும் சில பள்ளிகள் தாங்களாகவே சில பாடத்திட்டத்தை உருவாக்கி அவற்றை பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் அரசு, மெட்ரிக் பள்ளி மாணவர்களை காட்டிலும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுப்பதாக புகார் எழுந்தது.

மனுதாக்கல்
இந்நிலையில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட பாடங்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுத்து சுமையை கொடுக்கக் கூடாது என்றும் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

புரிந்து கொண்டு
அதற்கு என்சிஇஆர்டி பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில் குழந்தைகள் புத்தகங்களில் இருந்து புரியாமல் பாடங்களை மனப்பாடம் செய்வதை காட்டிலும் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, புரிந்து கொண்டு படிப்பதே சிறந்ததாகும்.

18 ஆயிரம் பள்ளிகள்
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை 18 ஆயிரம் பள்ளிகள் பின்பற்றுகின்றன. அவ்வாறு பின்பற்றும் பள்ளிகள் 2-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது.

3 பாடப்பிரிவுகள்
3-ஆம் வகுப்பு வரை 3 பாட ப்பிரிவுகள் மட்டுமே கற்பிக்க வேண்டும். அவை ஆங்கிலம், கணக்கு மற்றும் தாய்மொழி ஆகும். ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாக என்று என்சிஇஆர்டி பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

பாதிப்பு
உண்மையில் பார்க்கும்போது 1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், பொது அறிவு, இந்தி உள்பட 8 பாட பிரிவுகள் திணிக்கப்படுகின்றன. மேலும் 3 மற்றும் 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பதே மனுதாரரின் குற்றச்சாட்டு ஆகும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications