ஓ பன்னீர் செல்வம் முதல்வராக உதவியதா பாஜக? - வெங்கையா நாயுடு விளக்கம்
சென்னை: ஓ பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக மோடியின் அரசு உதவியதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இது அவர்கள் கட்சியின் முடிவு. இதில் எங்கள் தலையீடு எதுவும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற முறையில் மத்திய அரசு உதவிகளைச் செய்து வருகிறது.

ஓ.பன்னீர் செல்வம் 2 முறை ஜெயலலிதாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது ஜெயலலிதா இறந்த பிறகு அவர் பதவியேற்று இருக்கிறார். அதற்குள் அவரின் செயல்பாட்டை எப்படி கூற முடியும்," என்றார்.
சசிகலா முதல்வராக வேண்டும் என அமைச்சர்கள் சிலர் கூறி வருவது குறித்து கேட்டபோது, "யார் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும் என்பது அக்கட்சியின் முடிவு. இதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது. இது உள்கட்சி விவகாரம்," என்றார்.
மேலும் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட துணை சபாநாயகர் தம்பிதுரை தனது லெட்டர் பேடைப் பயன்படுத்தி இருக்கக் கூடாது என்றும் வெங்கையா நாயுடு கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மத்திய அரசுக்கு கோர்ட்டு நோட்டீசு அனுப்பியிருக்கிறதே? என்ற கேள்விக்கு, "உயர் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு பதில் அளிக்கும்," என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications