அரசுப் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவே இல்லை... பொன் .ராதாகிருஷ்ணன்
எல்கேஜி மாணவர்களுக்கு இருக்கும் அறிவுக் கூட அரசுப் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வள்ளியூர்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் படிக்கும் எல்கேஜி குழந்தைகளின் அறிவுகூட இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வள்ளியூரில் பாஜக சார்பில் கருத்தரங்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பாஸ்போர்ட்டில் ஆங்கிலத்துடன் இந்தியிலும் தகவல்கள் இடம்பெறும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

அதேபோல் தமிழிலும் பாஸ்போர்ட் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எல்லை தாண்டி மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.
8 வகுப்பு வரை சீரான கல்வி முறையை தமிழக அரசு பின்பற்றவில்லை. தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைகளின் அறிவாற்றல், புத்திக் கூர்மை, அரசு பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இல்லை. அந்தளவுக்கு உள்ளது கல்வியின் தரம்.
தமிழகத்தில் அரசு ஊதியம் பெறும் அதிகாரிகள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை அனைவரின் குழந்தைகளையும் கட்டாயமாக அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
மத்திய அரசு பள்ளிகளை தமிழகத்தில் நிறுவுவதற்கு தமிழக அரசு போதிய முயற்சி எடுக்கவில்லை. அதற்கு தமிழக அரசுதான் முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க முடியும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications