விஜயகாந்த் வாழ்வில் இனிமேல் வெற்றியே இல்லை: இப்ராஹீம் ராவுத்தர்
கரூர்: இனிமேல் அரசியலில் எப்போதுமே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற முடியாது என அவரது முன்னாள் நண்பரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான இப்ராஹீம் ராவுத்தர் தெரிவித்துள்ளார்.
கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து கரூர் சின்னப் பள்ளிவாசல் தெருவில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முன்னாள் நண்பரும், அதிமுக தலைமை கழக பேச்சாளருமான இப்ராஹீம் ராவுத்தர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

சினிமா துறையில் துணை நடிகராக இருந்த போதே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்கு பல உதவிகளை செய்தார். அதனால் தான் அவரது புகழ் உலகம் முழுக்க பரவியது.
அது மட்டும் அல்ல அடுத்தவருக்கு கொடுத்து உதவ வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தியவரே எம்.ஜி.ஆர். தான். அவர் வழியில் முதல்வர் ஜெயலலிதா சாதாரண தொண்டருக்கும் உயர்ந்த பதவியை கொடுத்து அழகு பார்க்கின்றார். ஆனால் விஜயகாந்த் என்ன செய்கின்றார். அவரை நம்பி வந்த அவரது தொண்டர்களையே அடித்து உதைக்கின்றார். இதுவா மனிதனுக்கு அழகு, ஒரு தலைவருக்கு அழகு.
முதல்வர் ஜெயலலிதா ஆதரவால் தான் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியை பெற முடிந்தது. இனிமேல் அவரால் அரசியலில் எந்த பதவியும் பிடித்து வெற்றி பெற முடியாது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சி தலைவர்களுக்கு வாரிசு உண்டு. பதவி சுகத்தை அனுபவித்து வருகின்றனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் தான் வாரிசு என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications