ஜெ முதலாளி... சசி வேலைக்காரியா... என்னய்யா லாஜிக் இது?
ஏன் இந்த தமிழக மக்கள் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள்? சசிகலாவை ஆயம்மா, வேலைக்காரி என கிண்டல் செய்வதைவிட ஒரு அரசியல் குருட்டுத்தனம் இருக்க முடியுமா? எந்த ஆயம்மா சாராய ஆலை வைத்திருக்கிறார்? எந்த வேலைக்காரி ஜாஸ் தியேட்டர் வாங்கியிருக்கிறார்? எந்த பாத்திரம் விலக்குகின்றவரால் பையனூர் பங்களாவை பிடுங்க முடியுமா?
இப்போது கங்கை அமரன் தனது பையனூர் பங்களாவை சசிதான் பிடிங்கினார் என பேட்டி கொடுக்கிறாரே, பையனூர் பங்களா பிடுங்கப்பட்டபோது ஜெ தானே முதல்வர்? அப்போதே பிரஸ்மீட் வைத்து அந்த பிடுங்கலில் சம்பந்தமே இல்லாத ஜெவிடம் நியாயம் கேட்க வேண்டியதானே? முடியாது! ஏனெனில் பிடுங்கியது ஜெ-சசி என இருவருமாக சேர்ந்துதான். பாலு ஜுவல்லர்சில் இருந்து ஜாஸ் தியேட்டர் வரை இருவரும் பார்ட்னர்ஸ் இன் க்ரைம் என்பதுதான் உண்மை. இதில் எங்கே ஜெ முதலாளியானார், சசி வேலைக்காரி ஆனார்? கொஞ்சமாவது லாஜிக் வேண்டாமா?

உண்மையில் இந்த இரு முதலாளிகளுக்கும் வேலைக்காரர்களாக இருந்தது பதவிக்காக டயர் வரை கூழைக் கும்பிடு போட்டு, காலால் இட்ட பணியை தலையால் செய்துமுடித்த ஓ.பி.எஸ் போன்றவர்கள்தான். ஜெ செத்து இத்தனை நாட்கள் ஆனபின் அவருக்கு ஞானம் வருகிறதாம். தனது முதல்வர் பதவி பிடுங்கப்பட்டவுடன், சசிக்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளது என நன்றாக தெரிந்தவுடன் இவரிடம் ஜெ ஆன்மா பேசுகிறதாம், உந்துகிறதாம், உருளுதாம், உடையுதாம்!
இன்னும் தெளிவாகச் சொன்னப்போனால் தன் இரு முதலாளிகளில் பலமான முதலாளியின் இடம் காணாமல் போனவுடன் சொத்தை ஆட்டையைப் போட நினைக்கும் வேலையாளின் சுயநலன்தான் ஓ.பி.எஸ்ஸுக்கு இருக்கிறதே தவிர, அதில் கட்சி நலன், அரசு நலன், மக்கள் நலன் இருக்கிறது என நினைப்பது மகா அரசியல் அறிவீனம்.

நாம் எதிர்பார்க்க வேண்டியதும், கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் சசியா, ஓ.பி.எஸ்சா என்பதற்காக அல்ல. மாவை இட்லியாக சுட்டால் என்ன தோசையாக சுட்டால் என்ன?
நாம் கேட்க வேண்டியதும், குரல் எழுப்ப வேண்டியதும் பொதுத்தேர்தல் மட்டும்தான். திவாலை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் தமிழக அரசை அது மட்டுமே காப்பாற்றும்.
-டான் அசோக்
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications