அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் ஒரு அணியாகவும், டிடிவி தினகரன் தலைமையில் ஆதரவாளர்கள் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் ஒரு அணியாகவும் உள்ளனர். இந்நிலையில் விழுப்புரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விழுப்புரத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

No one can shake ADMK rule: Minister CV Shanmugam

இதில் கலந்துகொண்டனர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்ச சிவி சண்முகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி யாருடைய பின்புலமின்றி செயல்படுவதாக கூறினார்.

அனைத்தையும் கடந்து நலத்திட்டங்களை செய்து வருகிறது அதிமுக அரசு எனவும் அவர் கூறினார். மேலும் தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுக ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister CV Shanmugam said in Vilupuram MGR centuanary function that No one can shake ADMK rule. He said that Chief minister edappadi palanisami is working without any back support.
Please Wait while comments are loading...