நான்தான் அவுங்கள நீக்கிட்டேனே, அவுங்க என்னை எப்படி நீக்க முடியும்? கேட்கிறார் கருணாஸ்!
என்னை கட்சியில் இருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் தெரிவித்தார்.
சென்னை: முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று திருவாடாணை எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸும் தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அணுகியது. அப்போது கூட்டணி அமைக்க ஒப்புதல் தெரிவித்த ஜெயலலிதா இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கராராக தெரிவித்தார்.

இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர் அனைத்து நிர்வாகிகளையும் நீக்கினார். இதைத் தொடர்ந்து முக்குலத்தோர் புலிப்படையில் இருந்து எம்.எல்.ஏ. கருணாஸ் நீக்கப்பட்டுள்ளதாக மதுரையில் புலிப்படை செயலாளர் பாண்டித்துரை, துணைத் தலைவர் சந்தானகுமார் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
இதுகுறித்து கருணாஸ் தெரிவிக்கையில், கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாக நான் ஏற்கெனவே அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டேன். எனவே நீக்கப்பட்ட அவர்கள் என்னை நீக்க முடியாது. என்னை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று கருணாஸ் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications