இங்க கரண்டும் இல்ல… படிச்சவங்களுக்கு வேலையும் இல்லை: குஷ்பு
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை... தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை எனவே வேலைவாய்ப்பைத் தேடி அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்ன பில்லாப்பாவை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரசாரம் செய்தார்.

ஓசூரில் நேற்று மாலை பிரசாரத்தை தொடங்கிய அவர் பாகனூர், பேரிகை, அத்திமுகம், சூளகிரி, வேப்பனப்பள்ளி, மகாராஜ கடை, வரட்டனப்பள்ளி, எலத்தகிரி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் ஆகிய ஊர்களில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:
தொழில் வளர்ச்சி இல்லை
தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தொழில் வளர்ச்சியில் 12.1 சதவீதமாக இருந்தது. இப்போது 4.1 சதவீதமாக உள்ளது. அதாவது 8 சதவீதம் குறைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள்
கடந்த தி.மு.க. ஆட்சியில் பல பன்னாட்டு தேசிய நிறுவனங்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள், உள் வட்டச் சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச் சாலைகள் கொண்டு வரப்பட்டன. மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர். பாலுவின் முயற்சியால் சாலை வசதிகள் கிடைத்தன.
வேலை இல்லை
ஓசூருக்கு தி.மு.க. ஆட்சியில் முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட், தகவல் தொழில் நுட்ப பூங்கா போன்றவை கொண்டு வரப்பட்டன. இன்று படித்த இளைஞர்களுக்கு கூட வேலை கிடைக்காத சூழ்நிலை உள்ளது.
பக்கத்து ஸ்டேட் போறாங்க
தமிழகத்தில் தொழில் தொடங்க நினைத்தவர்கள் எல்லாம் பக்கத்து மாநிலங்களை தேடிச் செல்லும் நிலை உள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்பேட்டையில் ரூ.12 ஆயிரம் கோடியில் தொழில் பேட்டை அமைக்க உள்ளார்கள். இதே தொழில் பேட்டை தமிழகத்தில் வந்தால் எத்தனை இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றிருப்பார்கள்.
கூட்டுக்குடிநீர் திட்டம்
ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டத்தை தொடங்கி வைத்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி. 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார். இதையடுத்து சட்டமன்றத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக இந்த திட்டத்தை அவசர அவசரமாக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லை
ஆனாலும் முழுமையாக பணிகள் முடிவடையாததால் இன்னும் பல ஊர்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போய் சேரவில்லை. மக்களுக்கு சரியாக தண்ணீரை கொடுக்க முடியாத அ.தி.மு.க. அரசு தற்போது தண்ணீரை ரூ.10-க்கு விற்பனை செய்கிறார்கள்.
மாற்றத்தை எதிர்பார்த்து நீங்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தீர்கள். ஆனால் உங்களுக்கு ஏமாற்றமே வந்தது. இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்திட வேண்டும் இவ்வாறு குஷ்பு பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications