எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி.. இளங்கோவன் விடும் எச்சரிக்கை
சென்னை: விருப்ப மனு கொடுத்தால் மட்டுமே சீட் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அப்படித் தராதவர்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக சீட் தரப்பட மாட்டாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயிரக்கணக்கானோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். தொகுதிக்கு 10க்கும் மேற்பட்டோர் கொடுத்துள்ளனர்.

இவர்களின் தகுதி, ஜெயிப்பார்களா என்பது உள்ளிட்டவை தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவில்லை. மற்றவர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இனிமேல் அது கிடையாது. தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்கும்.
விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு மட்டுமே சீட் கிடைக்க வாய்ப்புண்டு. விருப்ப மனு கொடுக்காதவர்கள், ஆய்வில் கலந்து கொள்ளாதவர்கள், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு சீட் வழங்கப்பட மாட்டாது.
ராகுல் காந்தி விரைவில் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க வருகிறார். அடுத்த மாதம் 20ம் தேதி திருச்சியில் திராவிடர் கழகம் சமூகநீதி மாநாட்டில் கருணாநிதி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்திக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் தனது முடிவை அறிவிப்பார் என்றார் அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications