ராமதாஸ், அன்புமணிக்கு அச்சுறுத்தல் இல்லை: ஹைகோர்ட்டில் அரசு வக்கீல்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இன்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அரசு வழங்கிய பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருவருக்கும் அச்சுறுத்தல் உள்ளதால் மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இம் மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கேகே சசிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.கே.மணி சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் பாலு, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லவேண்டியிருக்கிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜரான இன்பதுரையோ, பாதுகாப்பு தொடர்பான குழு கூட்டம் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. இதில் போலீஸ் உயர் அதிகாரிகளும், மத்திய அரசு கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை என்று முடிவு செய்யப்பட்டது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து 2 வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். அத்துடன் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் லோக்சபா தேர்தலின்போது எங்கு பிரச்சாரம் செய்வார்கள் என்பது பற்றிய பட்டியலை சம்பந்தப்பட்டவர்கள் வியாழக்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications