தூய தமிழை அழகாக உச்சரித்துப் பேசியவர் மனோரமா... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகழாரம்
சென்னை: தூய தமிழில் வசனங்களை அழகுற பேசி நடித்து மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர் நடிகை மனோரமா. அவரது மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களிலும் 60 ஆண்டுகளில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நகைச்சுவை நடிகை மனோரமா அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக்க துயரமும் வருத்தமும் அடைந்தேன்.

திரைப்படத்தின் வசனங்களை அழகான தூயத்தமிழில்; உச்சரிப்பதில் அவருக்கு இணை அவர் தான். நாகேஷ், மனோரமா இணைந்த நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியதை போல இனி எவராலும் இயலுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
பெருந்தலைவர் காமாராஜர் மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் மனோரமா. இவர் தம்முடைய கலைத்துறைப்பணிக்கு தொடக்ககாலத்தில் பேருதவியாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன் என்று பலமுறை நன்றியோடு நினைவுக்கூர்ந்து இருக்கிறார்.
தமிழ் திரைப்படத்துறையை பொறுத்த வரை மனோரமாவின் இழப்பை எவராலும் ஈடுசெய்ய முடியாத வகையில் பெரும் இழப்பாகும். அவரது மறைவால் வாடும் திரையுலக நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications