ஏற்காடு சட்டசபைத் தேர்தல்... 9ம் தேதி தொடங்குகிறது வேட்பு மனு தாக்கல்

ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி அங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரத்தை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கி விட்டன.
இங்கு நவம்பர் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களை நவம்பர் 16ம் தேதி வரை தாக்கல் செய்யலாம். மனுக்கள் 18ம் தேதி பரிசீலிக்கப்படும். 20ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய விரும்புவோர், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறை எண் 109 ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலரும், தேர்தல் அதிகாரியுமான சபாபதியிடம் தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வருவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் மாறன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை தேமுதிக மட்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பிற கட்சிகள் திமுக அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாஜக, பாமக, மதிமுக ஆகியவை போட்டியிடவில்லை.
வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் ஏற்காடு பிரசாரம் தீவிரமடையும். பிரசாரத்திற்காக தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும் அங்கு குவிந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications