சென்னையில் அதிகாலை முதல் அடித்து ஆடும் மழை... சாலைகளில் வெள்ளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் அதிகாலை முதல் அடித்து ஆடும் மழை...

  சென்னை: சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்கிறது. மயிலாப்பூர், மந்தைவெளியில் பலத்த மழை பெய்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

  சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு யைம இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றார்.

  North East Monsoon: Rain hit in Chennai

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை புறநகரில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

  வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30 முதல் தீவிரமடைய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.

  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, ராயப்பேட்டை,திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது.

  சாலைகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகனங்களில் பள்ளி கல்லூரி செல்பவர்களும், அலுவலகம் செல்பவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennais real monsoon spells start from today. Heavy rain hit in Chennai.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற