For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப.சி.க்கு தோல்வி பயமும் இல்லை.. அரசியல் இருந்து ஓய்வு பெறவும் இல்லை: மகன் கார்த்திக் சிதம்பரம்

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோம் என்ற பயம் என் தந்தைக்கு இல்லை.. அவர் தீவிர அரசியலில் இருந்தும் ஓய்வு பெறவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Not right to say my father is scared of defeat: Karti Chidambaram

லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார் இம்முறை நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடவில்லை. தோல்வி பயத்தாலே சிதம்பரம் போட்டியிடாமல் ஓடி ஒளிந்து கொண்டதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சாடி வருகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் சிதம்பரம் போட்டியிடாததை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கார்த்திக் சிதம்பரம். அளித்த பதில்:

சிவகங்கை தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு காங்கிரஸ் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

சிவகங்கை தொகுதியில் நான் வரலாறு படிப்பேன். கடந்த 9 தேர்தல்களில் போட்டியிட்ட எனது தந்தை ப.சிதம்பரம் வழியில் நடப்பேன். எனக்கு அவர் இந்த முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் நிச்சயமாக அவர் அரசியலில் இருந்து ஓய்வு இல்லை.

இவ்வாறு கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

English summary
Karti Chidambaram said, "There is no question of Congress getting isolated in Tamil Nadu. I am confident our party will do well." Speaking about Mr Chidambaram, he said, "It's not right to say my father is scared of defeat."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X