For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்தி சிதம்பரம் வீட்டில் எதையும் கைப்பற்றவில்லை- அமலாக்கத் துறை

டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எனது வீட்டின் படுக்கையறையில் சோதனை நடத்தினர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு- வீடியோ

    சென்னை: டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் இன்று நடத்தப்பட்ட ரெய்டில் எதையும் தாங்கள் கைப்பற்றவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளனர்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி, ஐஎன்எக்ஸ் மீடியா என்கிற நிறுவனம் அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    Nothing seized from Karthi Chidambaram's house, says ED

    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு இன்று காலை 7.25 மணிக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர்.

    அப்போது சிதம்பரம் வீட்டில் இல்லை. அவரது மனைவி நளினியும், மருமகள் ஸ்ரீ நிதியும் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    ஐஎன்எக்ஸ் நிறுவன வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சோதனைகள் கிட்டதட்ட 10.30 மணிக்கும் முடிவடைந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை.

    காலை 7.25 மணி முதல் 10.30 மணி வரை சோதனை நடத்தினோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

    English summary
    Enforcement Directorate says that they have searched in Karthi Chidambaram's house, but seized nothing. ED summons him on Jan 16 for INX Media case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X