நியூட்ரினோ ஆய்வுக்கு தடைகோரி வைகோ வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
மதுரை: நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக வைகோ தொடர்ந்த வழக்கில், விளக்கமளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு, நீதிபதிகள் டி. மதிவாணன், வி.எஸ். ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜராகி வாதிட்டார்.

நியூட்ரினோ ஆய்வகத்துக்காக தோண்டப்படும் சுரங்கம், அதில் பயன்படுத்தப்படும் வெடிபொருள்களால் முல்லைப் பெரியாறு, கேரளம் மாநிலத்தின் இடுக்கி அணை உள்ளிட்ட 12 அணைகள் உடையும் ஆபத்து உள்ளன. வெடிபொருள்கள், கதிர்வீச்சு காரணமாக நிலத்தடி நீர் திசைமாறுவதோடு, அதில் நச்சு கலக்கும் ஆபத்தும் உள்ளது. இதனால் பல மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அழிந்துபோகும் என அஞ்சுகிறோம். எனவே இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இத்திட்டத்துக்கு கேரளம் அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ இல்லை என்றார். மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பதில் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், பதிலைப் பெறுவதற்கு கால அவகாசம் கோரினார்.
தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நிபந்தனைகளின் பேரில், இத்திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையடுத்து மனுவுக்கு மத்திய, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர்கள், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறைச் செயலர், அணுசக்தி துறைத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications