நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
புதுச்சேரி: புதுச்சேரியின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளை ஏற்று நவம்பர் 1-ம் தேதியை புதுவையின் விடுதலை நாளாக முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றிய பின் முதல்வர் ரங்கசாமி ஆற்றிய உரை:

ஆகஸ்ட் 16ந் தேதியை புதுச்சேரி மாநிலத்தின் ஆட்சிமாற்ற தினமாக கொண்டாடுவதோடு, புதுவை விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வரலாற்றுச் சான்றுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தோம்.
அதன் பரிந்துரையின் படி இந்த ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதியை புதுச்சேரியின் விடுதலை நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. துணைநிலை ஆளுநர் தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதுவை அரசின் வரவு-செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும்.
கருவடிக்குப்பத்தில் பெருந்தலைவர் காமராஜர் மணி மண்டபம் கட்டும் பணி ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடைபெறும். புதுவை நகரம், புறநகர்ப் பகுதியில் ரூ.307.46 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் விநியோகத் திட்டம், காரைக்காலில் ரூ.161.43 கோடி மதிப்பீட்டில் குடிநீர்த் திட்டப் பணிகள் துவங்கப்படும்.
புதுவையில் உள்ளது போல் காரைக்கால் திருநள்ளாறில் துணை மண்டல அறிவியல் மையம், கோளரங்கம் கட்டப்படும்.
கிராமப் புற இளைஞர்களுக்காக வில்லியனூரில் இலவச ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு புதுவை முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications