இனி தபால்நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்
சென்னை: சென்னை வாசிகள் இனி தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை முதல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. .
இதற்காக தபால் துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எப்படி இச்சேவை சுமுகமாக்குவது என திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும், எந்தெந்த தபால் நிலையங்களில் இந்த சேவையை அளிக்கலாமா என்று ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.
கட்டண விபரம்:
தபால்நிலையங்களில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவையைப் பெற இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம் இல்லையெனில் பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம் என போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலெக்சாண்டர் தெரிவித்தார்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவு செய்யும் பணியை மட்டுமே தபால்துறை ஊழியர்கள் செய்வார்கள் என்றும் விண்ணப்பதாரர் விபரங்களை சரிபார்க்கும் பணியை தபால்துறை மேற்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
மேலும் தபால் ஊழியர்கள் பல விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய எதுவாக அவர்களுக்கு பிரத்யேக கணினி பயன்பாட்டு பெயர் மற்றும் ஐ.டி. வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டி வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலிருக்கும் தகவல்களை ஊழியர் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்வார். விண்ணப்பதாரர்கள், தங்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம்.
தபால் ஊழியர்களுக்கு, விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு அதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் பாஸ்போர்ட் மையங்களில் நடைபெறும் நேர்காணலுக்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
முதற்கட்டமாக இத்திட்டம், சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மொத்தம் 25 தபால் அலுவலகங்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குறிப்பாக 10 தபால் நிலையங்களில் இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும். மக்கள் வரவேற்பை பொறுத்து படிப்படியாக இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications