கைவிரித்தார் ஆளுநர்.. டெல்லியை நோக்கி நகர்கிறது தமிழக அரசியல்

பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட இயலாது என்று ஆளுநர் தெரிவித்து விட்டதால் அடுத்து டெல்லிக்கு காட்சிகள் இடம் பெயருகின்றன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் தரப்பு எம்எல்ஏ-க்கள் அதிமுகவிலேயே நீடிப்பதால், தன்னால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறுத்துவிட்டதால் தமிழக அரசியல் கட்சிகள் டெல்லியை நோக்கி படையெடுக்கவுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு பிறகு பிரிந்த அதிமுகவின் இரு அணிகளும் தற்போது இணைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணிக்கு துணை முதல்வர் பதவியும், அமைச்சரவையில் இடமும் கிடைத்தது. ஆனால் தினகரன் தரப்பு இதை ஏற்கவில்லை.

சசிகலாவை நீக்கும் நடவடிக்கைக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் நடவடிக்கையில் இறங்கியதால் முதல்வர் தினகரன் தரப்பின் எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்துத் தனித் தனியாக கடிதம் கொடுத்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்ததால் சிக்கல் அதிகரித்தது.

 முதல்வருக்கு எதிராக...

முதல்வருக்கு எதிராக...

தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் ஆளுநரை கடந்த வாரம் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றும் அவருக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்றும் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

 பெரும்பான்மை பலம்

பெரும்பான்மை பலம்

19 எம்எல்ஏ-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவாக இல்லாத காரணத்தால் சட்டப்படி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆளுநரை சந்தித்தனர். சட்டமன்றத்தை கூட்டி எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.

 ஆளுநர் நடவடிக்கை இல்லை

ஆளுநர் நடவடிக்கை இல்லை

ஆனால் 8 நாட்கள் கழித்தும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளான திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சந்தித்து இதே கோரிக்கை வலியுறுத்தினர். ஆனால் அதிமுகவின் 19 எம்எல்ஏ-க்களும் வேறு கட்சிக்கு போகவில்லை. மேலும் முதல்வரை மாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவர்களது கோரிக்கையாக உள்ளதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அறிவிக்க இயலாது. அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து விட்டதால் அது அவர்களின் உள்கட்சி பிரச்சினையாகிவிட்டது. இதில் நான் தலையிடவும் முடியாது என்று ஆளுநர் கைவிரித்துவிட்டார்.

 அடுத்து டெல்லி

அடுத்து டெல்லி

இன்று ஆளுநர் தங்களை அழைத்து தாங்கள் கொடுத்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை ஜனாதிபதியிடம் முறையிடுவோம் என்று தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்கதமிழ் செல்வன் கூறியிருந்தார். அதே நேரம் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரி திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் நாளை டெல்லி செல்லவுள்ளனர். தற்போது ஆளுநர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துவிட்டதால் தினகரன் அணியும் நாளை ஜனாதிபதியை சந்திக்க டெல்லிக்கு டிரிப் அடிக்கும்.

ஸோ, அடுத்த காட்சி.. டெல்லியில்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+