எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
எண்ணூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை: எண்ணூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மீனவர்கள் வங்கக் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வானிலை மையத்தின் எச்சரிக்கையால் சென்னை எண்ணூர், கடலூர், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்திலும் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறைமுக பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதாலும் விரைவில் புயல் உருவாகும் என்பதாலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications