சென்னை நாகை, கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை, நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. சென்னையிலும் நாள் முழுக்க அவ்வப்போது தூறிக்கொண்டே இருந்தது.

இதையடுத்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட மேற்கில் நகர்ந்தது. தற்போது மேற்கு மத்திய வங்க கடலில், ஒடிசாவின் புரி கடற்கரைக்கு 330 கிலோ மீட்டர் தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது.
இது புயலாக மாறி நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாம்பன், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications